மண் வளத்தை அதிகரிக்க வேளாண் வல்லுனர் அறிவுரை
ஈரோடு: பண்ணை கழிவுகளை நுண்ணுயிர் கலவை மூலம், மட்க வைத்து, மண் வளத்தை அதிகரிக்கலாம்.
இதுகுறித்து ஈரோடு வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுனர் சரவணக்குமார் கூறியதாவது:
பயிர் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை வழங்குவதில் கால்-நடை கழிவு, உயிர் உரங்கள் மற்றும் ரசாயன உரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.
பண்ணையில் இருந்து பெறப்படும் பயிர் கழிவு, சருகு, மரங்-களில் இருந்து கிடைக்கப்பெறும் இலை, தழைகளை சரியான முறையில் மக்க வைப்பதன் மூலம், பண்ணைக்கு தேவையான உரங்களை நாமே உற்பத்தி செய்யலாம்.
1,000 கிலோ பயிர் கழிவுகளை மட்க வைக்க, 2 கிலோ பயோ மினரலைசர் போதும். பயோ மினரலைசரை, 20 லிட்டர் தண்-ணீரில் கலந்து, பண்ணையிலிருந்து பெறப்படும் பயிர் மற்றும் இதர கழிவுகளை பரப்பி அதன் மீது தெளிக்க வேண்டும். பின் கழிவுகளை, 15 நாட்களுக்கு ஒரு முறை கிளறிவிட வேண்டும். காற்றோட்டம் இருந்தால் மட்டுமே நன்கு மக்கும். இப்படி செய்தால், 40 முதல், 45 நாட்களில் மக்கி விடும். இந்த நுண்-ணுயிர் கூட்டு கலவையை, வேளாண் பல்கலைக்கழத்தின் சுற்றுச்-சூழல் அறிவியல் துறை மூலம் தயாரித்து, விவசாயிகளுக்கு வழங்கி
வருகிறது.
அதேபோல் பயிர் வளர்ச்சி மற்றும் கழிவுகளை மக்க வைக்க உதவும் நுண்ணுயிர்களை பிரித்தெடுக்க, திறன்மிகு நுண்ணுயிர் கரைசல் உற்பத்தி செய்யப்படுகின்றன. 1 டன் பயிர் மற்றும் பண்ணை கழிவுகளை மக்க வைக்க, 10 முதல் 20 லிட்டர் திறன்-மிகு நுண்ணுயிர் கரைசல் தேவைப்படுகிறது. நிலைப்படுத்தப்-பட்ட திறன்மிகு நுண்ணுயிர் கரைசலை ஒரு லிட்டருக்கு 5 மில்லி வீதம் கலந்து கரைசல் செறிவூட்டப்படுகிறது.
பண்ணையிலிருந்து சேகரிக்கப்படும் பயிர் கழிவுகளை 4 அடி அகலம் மற்றும் போதிய நீளத்தில் ஒரு அடி உயரத்திற்கு பரப்பி, திறன்மிகு நுண்ணுயிர் கரைசலை தெளித்தால், 40 நாட்களில் மட்கி விடும். இதையடுத்து நன்கு முற்றிய கம்போஸ்ட் உரங்-களை அறுவடை செய்து பயிர் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம். இது சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன் ஈ, கொசு போன்றவற்றின் உற்பத்தியை தடுக்கின்றன.
இதில்லாமல் மத்திய அரசின் தேசிய அளவிலான அங்கக வேளாண் ஆராய்ச்சி மையம், கால்நடை மற்றும் தாவர கழிவு-களை எளிதில் மக்க வைக்கும், வேஸ்ட் டீகம்போசர் என்ற நுண்-ணுயிர் இடுபொருளை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. எனவே, விவசாயிகள் மாநில மற்றும் மத்திய அரசின் நுண்ணுயிர் கூட்டு கலவைகளை பயன்படுத்தி, கால்நடை மற்றும் பண்ணை கழிவுகளை சத்தான இயற்கை உரமாக மாற்றி நிலத்துக்கு இடு-வதன் மூலம், மண் வளத்தை அதிகரிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.