மீஞ்சூர் - வஞ்சிவாக்கம் சாலை பள்ளத்தால் விபத்து அபாயம்

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த நெய்தவாயல் கிராமத்தின் ஏரியை ஓட்டி மீஞ்சூர் - வஞ்சிவாக்கம் நெடுஞ்சாலை அமைந்து உள்ளது. இப்பகுதியில் மண் அரிப்பு காரணமாக, சாலையோரங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன.

வாகன ஓட்டிகள் பயணிக்கும்போது, பின்னால் வரும் வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும்போது, சாலையோர பள்ளங்களால் தடுமாற்றம் அடைகின்றனர்.

இரவு நேரங்களில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்துடன் பயணிக்கின்றனர். இப்பகுதியில் லஎதிர் எதிரே கனரக வாகனங்கள் பயணிக்கும்போது, விபத்துக்கள் நேரிடும் அபாயம் உள்ளது.

மேலும், இந்த சாலையில் உள்ள மழைநீர் கால்வாய்களும் பராமரிப்பு இன்றி, குப்பை, கழிவுகள் சேர்ந்து துார்ந்துபோய் கிடக்கிறது. இதனால் மழைக்காலங்களில் ஏரிக்கு மழைநீர் வருவதிலும் சிக்கல் உள்ளது.

நெய்தவாயல் பகுதியில் சாலையோர பள்ளங்களை மூடி சீரமைக்கவும், கால்வாய் துார்வாரி பராமரிக்கவும் வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement