வாக்காளர் சிறப்பு முகாமில் 6.85 லட்சம் மனு
சென்னை: இரண்டு நாட்களாக நடந்த, வாக்காளர் சிறப்பு முகாமில், 6.85 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு உள்ளன.
தேர்தல் கமிஷன் அறிவுறுத்தலின்படி, 2025 ஜனவரி, 1ம் தேதியை, தகுதி ஏற்படுத்தும் நாளாக வைத்து, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி, அக்., 29 முதல் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, கடந்த இரண்டு நாட்களாக அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
முகாமில் பெயர் சேர்க்க, நீக்க, பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் ஆர்வம் காட்டினர். இரண்டு நாள் முகாமில், 6 லட்சத்து 85,513 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. வரும் 23 மற்றும், 24ம் தேதிகளிலும், சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
***
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement