ரோட்டில் குவியும் மணலால் விபத்தில் சிக்கும் ஓட்டிகள்
தண்ணீர் தொட்டி சேதம் : பிலாத்து கம்பளியம்பட்டியில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டி நீர் கசிவு காரணமாக பயன்பாடின்றி உள்ளது. இதனால் சுற்றப்பகுதி மக்கள் பாதிக்கின்றனர். சீரமைப்பு பணி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
---மோகன், வடமதுரை.
போக்குவரத்துக்கு இடையூறு : திண்டுக்கல் பழைய கரூர் ரோடு நடுவே மாடு படுத்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆங்காங்கே திரிவதால் வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கவுரி, திண்டுக்கல்.
மணலால் விபத்து : திண்டுக்கல்- வத்தலக்குண்டு ரோட்டில் மணல் மேவி உள்ளதால் வாகனத்தில் செல்வோர் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மணலால் டூ வீலர் ஓட்டிகளும் கீழே விழுகின்றனர். மணலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சரவணன், திண்டுக்கல்.
சர்வீஸ் ரோட்டில் குப்பை : திண்டுக்கல் மதுரை நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் குப்பை குவிந்துள்ளது .பல நாட்களாக அள்ளாமல் உள்ளது.இலைகளுடன் பிளாஸ்டிக் கலந்த குப்பை குவியலால் சுற்றுசூழல் பாதிக்கிறது. சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. -விஸ்வநாதன், திண்டுக்கல்.
பயனற்ற கழிப்பறை : தாண்டிக்குடி பெரியூர் ஊராட்சி பள்ளத்து கால்வாயில் உள்ள கழிப்பறை பராமரிப்பின்றி பயனற்றுள்ளது. இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளாட்சி துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கரிகாலன், பெரியூர்.
தெருவில் தேங்கும் மழைநீர் : திண்டுக்கல் என்.எஸ்.நகர் ராஜகாளியம்மன் நகர் 2வது தெருவில் மழைநீர் செல்ல வழி இல்லாமல் குளம்போல் தேங்கி நிற்பதால் மக்கள் பாதிக்கின்றனர். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் சிரமம் ஏற்படுகிறது.
-சேகர், என்.எஸ்.நகர்.
பட்டுப்போன மரத்தால் விபத்து : திண்டுக்கல் சப் கலெக்டர் அலுவலக ரோட்டில் தேசிய நெடுஞ்சாலை உதவிக் கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் உள்ள பட்டுப்போன மரத்தால் விபத்து அபாயம் உள்ளது. மழைக்காலம் என்பதால் விபத்து ஏற்படும் முன் அகற்ற வேண்டும்.
-செந்தில்குமார், திண்டுக்கல்.