20 யூனிட் ரத்தம் சேகரிப்பு
சிகரங்கள் அறக்கட்டளை சார்பில், 85வது ரத்த தான முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம், திருப்பூர் - ஊத்துக்குளி ரோடு, மண்ணரை பொன்னி நர்சரி அண்ட் பிரைமரி பள்ளியில் நடந்தது. பள்ளி தாளாளர் அருண்குமார் துவக்கிவைத்தார். அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை குழுவினர், ரத்தம் சேகரித்தனர். 20 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.
ஐ பவுண்டேசன் சார்பில் நடத்தப்பட்ட இலவச கண் பரிசோதனையில், 152 பேர் பங்கேற்றனர். 76 பேருக்கு குறைபாடுகள் கண்டறியப்பட்டது. 14 பேர், இலவச கண் புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். ரேவதி மெடிக்கல் சென்டர் சார்பில் நடத்தப்பட்ட பரிசோதனையில், 26 பேருக்கு இ.சி.ஜி., பரிசோதனை செய்யப்பட்டது. சிகரங்கள் அறக்கட்டளை சார்பில், ரத்த கொடை யாளர்களுக்கு சான்று வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement