வாக்காளர் சேர்க்கும் பணி; அ.தி.மு.க.,வினர் தீவிரம்
கடலுார் ; கடலுார் நகரப்பகுதியில் புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியில் அ.தி.மு.க.வினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
கடலுார் திருப்பாதிரிப்புலியூர், வண்டிப்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று வாக்காளர் சுருக்கமுறை திருத்த முகாம் நடந்தது.
இதில் அ.தி.மு.க., சார்பில் புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணி தீவிரமாக நடந்தது.
அ.தி.மு.க., மாநில இளைஞரணி துணை செயலாளர் கார்த்தி கேயன் தலைமையில் 18 வயது பூர்த்தியான புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பதற்கான படிவங்களை பூர்த்தி செய்து அதிகாரிகளிடம் வழங்கினர்.
மாநகராட்சி கவுன்சிலர்கள் பரணிமுருகன், வினோத்குமார், தஷ்ணா, நெசவாளர் அணி குணசேகரன், கோவிந்தன், பன்னீர், சுப்புராயலு, அருள்குமார், பாலமுருகன், தினேஷ், பிரகாஷ், அஜித், தாஸ் உட்பட பலர் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement