எலான் மஸ்க் குறித்து அவதுாறாக பேசிய பிரேசில் அதிபர் மனைவி

புதுடில்லி: 'எக்ஸ்' சமூக வலைதள அதிபர் எலான் மஸ்க் குறித்து, பிரேசில் அதிபரின் மனைவி அசிங்கமாக பேசியது சர்ச்சையானது.


தென் அமெரிக்க நாடான பிரேசிலில், ஜி - 20 மாநாடு நடக்க உள்ளது.


இதையொட்டி நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அந்த நாட்டின் அதிபர் லுாயிஸ் இனாசியோ லுாலா டா சில்வாவின் மனைவி ஜான்ஜா லுாலா டா சில்வா பங்கேற்றார்.

அப்போது அவர் பேசுகையில், எலான் மஸ்க் குறித்து அசிங்கமாக பேசினார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், அவர் பேசியது, பெரிய ஹாரன் சத்தத்தால் மறைக்கப் பட்டுள்ளது.

இது குறித்து, சமூக வலைதளத்தில், பெரிய அளவில் சிரிக்கும் எமோஜி படத்தை வெளியிட்டுள்ளார் எலான் மஸ்க். மேலும், 'அடுத்தாண்டு நடக்கும் தேர்தலில் லுாலா டா சில்வா தோல்வி அடைவார்' என, குறிப்பிட்டார்.

நீதிமன்றம் உத்தரவிட்டும், சட்ட பிரதிநிதியை நியமிக்காதது மற்றும் சில குறிப்பிட்ட பதிவுகளை ரத்து செய்ய மறுத்த காரணத்தால், எக்ஸ் சமூக வலைதளத்துக்கு, பிரேசிலில் ஒரு மாதத்துக்கு இந்தாண்டு துவக்கத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதில் இருந்து எக்ஸ் சமூக வலைதளம் தொடர்பாக, பிரேசில் அரசு தொடர்ந்து விமர்சித்து வருகிறது.

Advertisement