ரிஷி சுனக்கிற்கு இந்திய கலாசாரம் பற்றி நன்கு தெரியும்; சுதா மூர்த்தி

லண்டன்: பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு இந்திய கலாசாரம் குறித்து நன்கு தெரியும் என்று அவரது மாமியாரும், இந்திய ராஜ்ய சபா எம்.பி.,யுமான சுதா மூர்த்தி தெரிவித்துள்ளார்.


லண்டனில் உள்ள பாரதிய வித்யா பவனில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், மனைவி அக்ஷதா மூர்த்தி மற்றும் அவரது தாயார் சுதா மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.


பாரதி வித்யா பவனில் பயிலும் மாணவர்களின் இந்திய கலாசாரத்தை பறை சாற்றும் விதமாக, குச்சிப்புடி, கதக் மற்றும் பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


அப்போது, சுதா மூர்த்தி பேசியதாவது: சிறந்த கல்வி உங்களுக்கு பறப்பதற்கான இறகை கொடுக்கும். ஆனால், சிறந்த கலாசாரம் உங்களை சிறந்த வாழ்க்கையில் நிலைநிறுத்தும். எனது மருமகன் ரிஷி சுனக் பெருமைமிக்க பிரிட்டன் குடிமகன். ஆனால், அவருக்கு இந்தியாவின் பாரம்பரிய கலாசாரம் நன்கு தெரியும்.


இந்திய கலாசாரத்தை கற்றுக்கொள்ள உங்கள் குழந்தைகளை பாரதிய வித்யா பவனுக்கு அனுப்பி வையுங்கள், எனக் கூறினார்.


அண்மையில் பிரிட்டனின் தற்போதைய பிரதமர் கைர் ஸ்டார்மெர் அளித்த தீபாவளி விருந்தில் அசைவ உணவுகளும், மதுபானமும் விநியோகிக்கப்பட்டது இந்திய வம்சாவளியினரை அதிருப்திக்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement