4.5 கிலோ தங்கம் பறிமுதல்!
ராமநாதபுரம்: இலங்கையில் இருந்து கடல் வழியாக கடத்திவரப்பட்ட 4.5 கிலோ தங்க கட்டிகளை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மண்டபத்தைச் சேர்ந்த நாசர் மற்றும் கேணிக்கரையை சேர்ந்த செய்யது இப்ராஹிம் ஆகிய இருவரை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மடக்கி பிடித்து விசாரித்து வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூபாய் 4.5 கோடி. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement