திருமலையில் ஹிந்துக்கள் அல்லாத ஊழியர்களை நீக்க வேண்டும்: ஆந்திர அரசுக்கு வாரியம் கடிதம் ?
ஹைதராபாத்: திருமலையில் பணியாற்றும் ஹிந்துக்கள் அல்லாத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ஆந்திர அரசுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திராவின் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில், விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் தலைவராக பி.ஆர்.நாயுடு, அவருடன் 24 பிரமுகர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த நவ.01- தேதி நடந்த ஆலோசனை கூட்டத்தில் திருமலை திருப்பதி கோவிலில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் ஹிந்துக்களாக இருக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து தேவஸ்தான வாரியம், ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. அதில் திருமலை திருப்பதி கோவிலில் ஹிந்துக்கள் அல்லாத ஊழியர்களை பணி நீக்கம் செய்து, அவர்களை அரசின் பிற துறைகளுக்கு மாற்ற வேண்டும் அல்லது விருப்ப ஓய்வு அளித்து வெளியேற்ற வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.