சிறுத்தை குட்டி நடமாட்டத்தை கண்டறிய கண்காணிப்பு கேமரா


சிறுத்தை குட்டி நடமாட்டத்தை
கண்டறிய கண்காணிப்பு கேமரா
ஓசூர், நவ. 19-
சூளகிரி அடுத்த புளியரசி கிராமம் அருகே, சூளகிரி - பேரிகை சாலையை நேற்று முன்தினம் நண்பகல், 12:10 மணிக்கு, சிறுத்தை குட்டி கடந்து சென்றது. இதை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். சிறுத்தை குட்டி உள்ளதால், தாய் சிறுத்தையும் உடன் இருக்க வாய்ப்புள்ளது. செட்டிப்பள்ளி காப்புக்காட்டில் இருந்து சிறுத்தை குட்டி வெளியேறி சாலையை கடந்திருக்கலாம் என, வனத்துறையினர் கருதுகின்றனர். அதனால், சிறுத்தையின் நடமாட்டத்தை உறுதி செய்து கண்காணிக்க, ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி உத்தரவின்படி, ஓசூர் வனச்சரகர் பார்த்தசாரதி மற்றும் வனத்துறையினர், சிறுத்தை குட்டி நடமாட்டமுள்ள, செட்டிப்பள்ளி காப்புக்காடு பகுதியில், பகல், இரவில் கண்காணிக்கும் வகையிலான நவீன கேமராக்களை பொருத்தினர். சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்து, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய, வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

Advertisement