பிளக்ஸ் போர்டு, சால்வை அணிவிப்பதை தவிர்க்க வேண்

பிளக்ஸ் போர்டு, சால்வை அணிவிப்பதை தவிர்க்க வேண்டும்: சக்கரபாணி
கிருஷ்ணகிரி, நவ. 19-
''பிளக்ஸ் போர்டு வைப்பது, சால்வை அணிவிப்பதை நிர்வாகிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்,'' என, அமைச்சர் சக்கரபாணி பேசினார்.
கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த கிழக்கு, மேற்கு மாவட்ட, தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம் நடந்தது. தி.மு.க.,வின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ் வரவேற்றார். மாவட்ட செயலாளர்கள் கிழக்கு மதியழகன் எம்.எல்.ஏ., மேற்கு பிரகாஷ் எம்.எல்.ஏ., தலைமை
வகித்தனர்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர்
மதியழகன் பேசியதாவது:
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட துணைச்செயலாளர் முருகன் இல்ல திருமண விழாவுக்கு, டிச., 5ல் துணை முதல்வர் உதயநிதி வருகிறார். ஆட்சி பொறுப்பேற்று, 4வது முறையாக அவர் வந்தாலும், துணை முதல்வராக பொறுப்பேற்ற பின், மாவட்டத்திற்கு வருகிறார்.
வரும், 2026ல், தி.மு.க., ஆட்சி என, பறைசாற்றும் வகையில் வரவேற்பளிக்க வேண்டும். அவரது பிறந்தநாளான வரும், 27ல், பிறக்கும் குழந்தைகளுக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில் தங்க மோதிரம் அணிவிக்கப்படும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:
வரும் டிச., 5ல், கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு மாவட்ட துணை செயலாளர் முருகன் இல்ல திருமண விழா. இதில் கலந்து கொள்ள துணை முதல்வர் உதயநிதி கிருஷ்ணகிரி வருகிறார். பிளக்ஸ் போர்டு, சால்வை அணிவிப்பதை நிர்வாகிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். வரும் 27ல், உதயநிதி பிறந்தநாள், மார்ச், 1ல் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள், ஜூன், 3ல், கருணாநிதி பிறந்தநாள் என, தொடர் நிகழ்ச்சிகள் வருகிறது. அதன்படி, தற்போது நாம் பிடிக்கும் ஒவ்வொரு சுவர் விளம்பரங்களிலும், அவை இடம்பிடிக்க வேண்டும். அவை வரும், 2026 சட்டசபை தேர்தல் வெற்றி வரை தொடர வேண்டும்.
இவ்வாறு. அவர் பேசினார்.

சொன்னது பலிச்சிடுச்சு
மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் பிரகாஷ் பேசுகையில், ''கடந்த, 2022ல், தளி ஒன்றிய செயலாளர் சீனிவாசலுரெட்டி இல்ல திருமண விழாவிற்கு வந்த இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி எம்.எல்.ஏ.,விடம் அடுத்த முறை நீங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வரும்போது அமைச்சராக வருவீர்கள் என்றேன். அது நடந்தது. அதுபோல் கடந்த, 2023ல் மேற்கு மாவட்ட துணைச்செயலாளர் இல்ல திருமண விழாவிற்கு அமைச்சராக பொறுப்பேற்று வந்த உதயநிதியிடம், அடுத்த முறை கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வரும்போது துணை முதல்வராக வருவீர்கள் என்றேன். அதுவும் தற்போது நடந்து விட்டது. கிருஷ்ணகிரிக்கு வருகை தரும் துணை முதல்வர் உதயநிதிக்கு, சிறப்பான வரவேற்பளிக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement