குமரகோட்டத்தில் ஆன்மிக புத்தக நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டுவர வலியுறுத்தல்
காஞ்சிபுரம்: தமிழகத்தில் ஹிந்து சமய அறநிலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும், ஆன்மிக புத்தக விற்பனை நிலையம் திறக்கப்பட்டு வருகிறது.
புத்தக நிலையத்தில் பன்னிரு ஆழ்வார்கள், தமிழ்நாட்டு கோவில் கட்டடக்கலை, ஆகம விதிகள், தமிழக கோவில் கலை வரலாறு, பெரிய புராண கதைகள், சைவ சமய சிறப்பு நுால்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
ராமாயணம், மகாபாரதம், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கோவில் மாத இதழ் உள்ளிட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள், ஏகாம்பரநாதர் கோவிலில் ஆன்மிக புத்தக நிலையம் திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
மேலும், குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆன்மிக புத்தக நிலையத்திற்கான அறை தயார் செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகிறது.
இருப்பினும், பயன்பாட்டிற்கு வராமல் புத்தக நிலையம் வீணாகி வருகிறது.
எனவே, காஞ்சிபுரம் குமரகோட்டத்தில் ஆன்மிக புத்தக நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் குமரகோட்டம் செயல் அலுவலர் கேசவன் கூறுகையில், ''ஆன்மிக புத்தக நிலையம்விரைவில் பயன்பாட்டிற்கு வர நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.