சிற்பங்களை இன்று இலவசமாக காணலாம்
மாமல்லபுரம்: உலகின் பல்வேறு நாடுகளில், பண்டைய கால பாரம்பரிய நினைவுச்சின்னங்கள் உள்ளன. அவற்றை பாதுகாத்து பராமரிப்பது, வருங்கால தலைமுறையினருக்கு உணர்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகியவற்றுக்காக, ஏப்., 18ம் தேதி சர்வதேச பாரம்பரிய தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்தியாவில், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, உலக பாரம்பரிய வாரமாக, நவ., 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.
பல்லவர் கால நினைவுச் சின்னங்கள் உள்ள மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களில், இவ்வாரத்தை கடைப்பிடித்து, பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இவ்வார துவக்க நாளான இன்று, மாமல்லபுரம் சிற்பங்களை சுற்றுலா பயணியர் கட்டணமின்றி இலவசமாக காணலாம் என, தொல்லியல் துறையினர் அறிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement