108 திருவிளக்கு பூஜை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பம்பை பாலகன் பக்த ஜனசபா சார்பில், 38வது ஆண்டு, கணபதி பூஜை, மலர் பூஜை, திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது.

விழாவையொட்டி நேற்று, காலை 6:00 மணிக்கு கணபதி பூஜையும், தொடர்ந்து அய்யப்பனுக்கு மலர் பூஜையும், தர்மசாஸ்தா பஜனை சபா குழுவினர், அய்யப்பன் பஜனை பாடல்களை பாடினர்.

மாலை 4:30 மணிக்கு பகவான் பாண்டுரங்க குருசாமி ஜோதி தரிசனம் காண்பித்தார். தொடர்ந்து, 108 திருவிளக்கு பூஜையும் நடந்தது. இன்று, மாலை 4:30 மணிக்கு இருமுடி விழாவை தொடர்ந்து, அய்யப்ப யாத்திரை துவங்குகிறது.

Advertisement