சாஸ்தா கோயில் நீர்த்தேக்கம் திறப்பு

சேத்துார்: சேத்துார் அடுத்த தேவதானம் சாஸ்தா கோயில் நீர்த்தேக்கம் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது.

தேவதானம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை செல்லும் பாதையில் சாஸ்தா கோயில் நீர்தேக்கம் உள்ளது. 36 அடி உயரம் கொண்ட நீர்த்தேக்கம் நவ 3ல் நிரம்பியது. இதை அடுத்துள்ள நகரக்குளம், பெரியகுளம், வாண்டையார் குளம் உள்ளிட்ட11 கண்மாய்களும் 3,600 ஏக்கர் விவசாய நிலங்களும் இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது.

இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து 50 கன அடி வீதம் 7 நாட்களுக்கு முதல் கட்டமாக எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் திறந்து வைத்தார். நீர் வரத்தை பொறுத்து 48 நாட்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தனலட்சுமி, உதவி செயற்பொறியாளர் ஜெய்சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement