கால்வாயில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
ஜலகண்டாபுரம்: கால்வாய் தண்ணீரில் தவறி விழுந்து சிறுவன் இறந்தான்.
வனவாசி, சப்பாணிப்பட்டி காட்டுவளவை சேர்ந்தவர் தங்கராஜ், 34. கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம், தனது மாமியார் ஊரான ஜலகண்டாபுரம் அருகே, காட்டம்பட்டிக்கு மனைவி மற்றும் குழந்தையுடன் சென்றுள்ளார். மாலை, 5:00 மணியளவில் மகன் அதர்வாவை, 10. காணவில்லை என தங்கராஜ் தேடி-யுள்ளார். சந்தேகத்தின் பேரில், அருகில் இந்திரா நகர் ஓடையில் சென்று பார்த்த போது, அதர்வா தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருந்தார்.
அவரை மீட்டு ஜலகண்டாபுரம் அரசு மருத்துவம-னைக்கு கொண்டு சென்றனர். அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது, ஏற்கனவே சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஜலகண்டாபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement