மொபட் ஓட்டும் 60 வயதுக்கு மேற்பட்டோரால் ஈரோடு மாவட்டத்தில் 20 சதவீத சாலை விபத்து

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் கடந்த, ௧௫ம் தேதி வரையி-லான கால கட்டத்தில், 527 பேர் சாலை விபத்துகளில் விபத்து நடத்த இடத்திலும், மருத்துவ சிகிச்சை பலனின்றியும் இறந்துள்-ளனர். கடந்தாண்டு, 545 பேர் சாலை விபத்துகளில் பலியான நிலையில், சாலை விபத்துகளை தவிர்க்க ஆய்வின் அடிப்ப-டையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டாலும் விபத்தை குறைக்க முடியாத நிலையே உள்ளது.



இதுபற்றி போலீசார் கூறியதாவது: மாவட்டத்தில் சாலை விபத்தை தவிர்க்க மாலை நேர ரோந்தில் ஈடுபடுகிறோம். ரிங் ரோடுகளில் சமீபத்தில் விபத்து அதிகரிக்கிறது. ரிங் ரோட்டில் மேம்பாட்டு பணி நடப்பதும் ஒரு காரணம். தேசிய நெடுஞ்சா-லையில் குறிப்பாக நசியனுார் பகுதிகளில் அதிக விபத்து ஏற்படு-கிறது. மேலும், மொபட்டுகளில் செல்லும், 60 வயதுக்கு மேற்-பட்ட முதியவர்கள் விபத்துகளில் அதிகம் சிக்குகின்றனர். மொத்த சாலை விபத்தில் இதுபோன்று மொபட்டில் சென்று பலியாகும் எண்ணிக்கை, 20 சதவீதமாக
உள்ளது.
பெரும்பாலும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களிடம் ஓட்-டுனர் உரிமம் இருப்பதில்லை. வாகன தணிக்கையில் இது தெரிய வருகிறது. வரும் நாட்களில் மொபட்டுகளில் வரும் முதியவர்க-ளிடம் எஸ்.பி., உத்தரவின்படி, விசாரணை நடத்தி உரிய ஆவ-ணங்கள் இருப்பதை உறுதி செய்வோம். இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement