'ஏ3' மாநாட்டில் 'தார்மிக்' குறும் பட விருது விழா; வரும் 25ம் தேதிக்குள் பதிவு செய்ய அழைப்பு
கோவை ; 'வாய்ஸ் ஆப் கோவை' அமைப்பு சார்பில் 'விழித்திடு, எழுந்திடு, உறுதியாக இரு' என்ற தலைப்பிலான 'ஏ3'(அவேக், அரைஸ், அசெர்ட்) மாநாடு, கோவை, அவிநாசி ரோடு, 'கொடிசியா-இ' ஹாலில் வரும், 30 மற்றும் டிச., 1ம் தேதி என, இரு நாட்கள் நடக்கிறது.
தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் வகையிலான இம்மாநாட்டில் முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், ஆன்மிக சொற்பொழிவாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் என, பல்துறை வல்லுனர்கள், 29 பேர் கருத்துகளை பகிர உள்ளனர்.
காலை, 9:00 முதல் இரவு, 8:00 மணி வரை மாநாடு நடைபெறும் நிலையில், முதல் நாளில் தர்மம், சனாதன தர்மம், ஆன்மிகம் சார்ந்த தலைப்புகளும், இரண்டாம் நாளில் இந்தியா மற்றும் சர்வதேச அளவிலான அரசியல் குறித்தும் பேசப்படுகிறது.
தர்மத்துக்காக துணை நிற்கும் சமூக ஊடகங்களுக்கு 'தார்மிக்' விருதுகளும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், தர்மம் தொடர்பான குறும் படங்கள் தயாரித்து வரும், 25ம் தேதிக்குள் அனுப்புபவர்களில், சிறந்த ஐந்து குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டுமாநாட்டில் திரையிடப்படவுள்ளது.
'வாய்ஸ் ஆப் கோவை' நிறுவனர் தலைவர் சுதர்சன் சேஷாத்ரி கூறுகையில்,''மாநாட்டின் ஒரு பகுதியாக 'தார்மிக்' குறும்பட விழா இடம் பெறுகிறது. இதில், தர்மம் தொடர்பான குறும் படங்கள், அதாவது, தேசிய சிந்தனை, தர்மம் பற்றி தவறான வழிநடத்தலும்அதுகுறித்து சரியான புரிதல் ஏற்படுத்துதலும், சனாதன தர்மம் உள்ளிட்ட தலைப்புகளில், அதிகபட்சமாக, 10 நிமிடங்கள் வரை குறும்படம் தயாரித்து வரும், 25ம் தேதிக்குள் குறிப்பிட்டுள்ளகியூ.ஆர்., கோடில் ஸ்கேன் செய்து பதிவு செய்யலாம். இவற்றில் சிறந்த ஐந்து குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டு வரும், 30ம் தேதி மாநாட்டில் திரையிடப்படும்,'' என்றார்.
மேலும், சிறந்த குறும் படங்களுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் விருதுகள் வழங்க உள்ளார். கூடுதல் விபரங்களுக்கு, 80726 61870 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.