பவானிசாகர் அணை மேல் பகுதியில் மாற்றுத்திறனாளி தீக்குளித்து தற்கொலை



புன்செய்புளியம்பட்டி: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை மேல் பகுதியில், பொதுப்பணித்துறை ஊழியர்கள் நேற்று அதிகாலை ரோந்து சென்-றனர். அணை நடுவில் செல்லும் பாதையில், ஒரு ஆண் உடல் கருகிய நிலையில் கிடந்தது. பவானிசாகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


விசாரணையில், கோவை, கணேசபுரத்தை சேர்ந்த தேவேந்திரன், 43, காது கேட்காத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி என்பது தெரிந்தது.


தேவேந்திரன் குடும்பத்தினருக்கு சொந்த ஊர் பவானிசாகராகும். சில ஆண்டுகளுக்கு முன் குடும்பத்துடன் கோவைக்கு சென்றுள்-ளனர். பவானிசாகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தவர், நள்ளி-ரவில் அணை மேல் பகுதிக்கு சென்று, சகோதரிக்கு மொபைல்-போனில் குறுந்தகவல் அனுப்பிவிட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருமணமாகாத தேவேந்திரன், வேலை கிடைக்-காத விரக்தியில், தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
பவானிசாகர் அணை பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால், அணை மேல் பகுதிக்கு செல்ல மக்களுக்கு அனுமதி இல்லை. பவானிசா-கரை சேர்ந்தவர் என்பதால், அணைக்கு செல்லும் அம்மாபா-ளையம் ஒற்றையடி பாதை வழியாக சென்று, தேவேந்திரன் தற்-கொலை செய்து கொண்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

Advertisement