ஒன்றிய செயலருக்கு எதிராக நிர்வாகிகள் போர்க்கொடி சேலம் மாவட்ட தி.மு.க.,வில் கோஷ்டி பூசல்
சேலம்: சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க.,வில் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம், வடக்கு, தெற்காக பிரிக்கப்பட்ட பின், வடக்கு ஒன்றிய செயலாளருக்கு எதிராக கட்சியில் பலர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.
சேலம் கிழக்கு மாவட்ட, தி.மு.க.,வில், ஏற்காடு சட்டசபை தொகு-திக்கு உட்பட்ட, அயோத்தியாப்பட்டணம் வடக்கு ஒன்றிய பாக முகவர்கள் கூட்டம், சின்னனுாரில் கடந்த, 15ல், நடந்தது. தொகுதி பொறுப்பாளரான, மாநில இளைஞரணி துணை செயலர் ஆனந்தகுமார் தலைமையில் கூட்டம் நடந்தது.
அயோத்தியாப்பட்டணம் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் கவு-தமன், துணை செயலர்கள் செந்தில், ஆறுமுகம், மகாலட்சுமி, பொருளாளர் பழனிவேல், பிரதிநிதிகள் கண்ணையன், அகரம் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்கவில்லை. ஒன்றிய செயலர் ரத்-தினவேல் மீதான அதிருப்தி காரணமாகேவே, ஒன்றிய நிர்வா-கிகள் பலர் கூட்டத்தை புறக்கணித்தனர். பலருக்கு ஒன்றிய செய-லாளர் அழைப்பு விடுக்கவில்லை என புகார் எழுந்தது.
இதற்கிடையே வடக்கு, தெற்கு ஒன்றிய செயலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி பூசல் காரணமாக, தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமாருக்கு ஆதரவாக, வடக்கு ஒன்றிய நிர்வா-கிகள் பலர் செயல்படுகின்றனர். மேலும் வடக்கு ஒன்றிய செய-லாளர் ரத்தினவேலுக்கு எதிராக புகார் மனுவும் அனுப்பியுள்-ளனர். அவர் கூட்டும் கூட்டங்களை புறக்கணித்து வருவதால் கோஷ்டி பூசல் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
இது குறித்து ஒன்றிய செயலர் ரத்தினவேல் கூறியதாவது:
ஒருங்கிணைந்த அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்துக்கு விஜய-குமார், எட்டு ஆண்டுகளாக ஒன்றிய செயலராக பதவி வகித்தார். இரு ஆண்டுக்கு முன், அயோத்தியாப்பட்டணத்தை தெற்கு, வடக்கு என பிரித்து, தெற்கு ஒன்றிய செயலராக விஜயகுமா-ரையும், வடக்குக்கு என்னையும், கட்சி தலைமை நியமித்தது.
என்னை எதிர்த்து போட்டியிட்ட செந்தில், ஒன்றிய துணை செய-லராக நியமிக்கப்பட்டார். அன்று முதல், எனக்கு எதிராக அரசியல் செய்ய துவங்கினார். அதை பொருட்படுத்தாமல், அவரை வீடு தேடி சென்று நேரில் சந்தித்து, ஒருங்கிணைந்து செயல்படலாம் என, பலமுறை அழைத்தும் ஒத்துவரவில்லை. எனக்கு எதிராக மட்டுமல்ல; கட்சிக்கு எதிராக அவர் செயல்பட்டு வருகிறார். அதனால், அவருக்கு அழைப்பு கொடுக்கவில்லை. ஒன்றிய பிரதி-நிதி கண்ணையன், இரண்டு ஆண்டாக அரசியலில் ஈடுபாடு இல்-லாமல் உள்ளார்.
தெற்கு ஒன்றிய செயலர் விஜயகுமாருக்கு அடிபணிந்து நடக்க வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் விரும்புகின்றனர். ஆனால், கட்சி உத்தரவுப்படி, நான் தனித்தன்மையுடன் செயல்ப-டுவதால் குறிப்பிட்ட சிலருக்கு என்னை பிடிக்கவில்லை.
இவ்வாறு கூறினார்.
தெற்கு ஒன்றிய செயலர் விஜயகுமார் கூறுகையில், ''என்னுடைய ஆதரவாளராக இருந்தாலும், அனைவரையும் அரவணைத்து கட்-சியை வழி நடத்தி செல்ல வேண்டும். நிர்வாகிகள் அல்லாதவரை வைத்து கொண்டு செயல்படுகிறார். கட்சி தலைமை வழங்கிய தீபாவளி பரிசு பொருட்களை கூட, ஒன்றிய பதவியில் இல்லாத-வர்களை வைத்து வழங்கி உள்ளார்,'' என்றார்.
கிழக்கு மாவட்ட செயலர் எஸ்.ஆர்.சிவலிங்கம் கூறுகையில், ''பாக முகவர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் கலந்து கொள்ளாதது குறித்து விசாரிக்கப்படும்,'' என்றார்.