கே.ஆர்.பாளையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் 

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் கடந்த 4ம் தேதி முதல் நடந்து வருகிறது. நேற்று ஒதியஞ்சாலை சிக்னல் துவங்கி அதிதி ஓட்டல் வரையிலான அண்ணா சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.

புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, வருவாய்த்துறை, போக்குவரத்து போலீஸ், சட்டம் ஒழுங்கு போலீசார் பாதுகாப்புடன் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. சாலையோரம் வைத்திருந்த விளம்பர பதாகைகள், படிகட்டுகள் இடித்து அகற்றப்பட்டது. சில வியாபாரிகள் தாங்களே அகற்றி கொள்வதாக கூறி அகற்றினர்.

திருக்கனுார்: திருக்கனுார் அடுத்த கே.ஆர். பாளையம்- கூனிச்சம்பட்டு செல்லும் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுந்தர்ராஜ், இளநிலை பொறியாளர் தேவேந்திரன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அதில், பொக்லைன் இயந்திரம் உதவியுடன் சாலையின் இரு புறத்திலும் இருந்த ஆக்கிரமிப்புகள் இடித்து அப்புறப்படுத்தினர். அப்போது, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement