11வது வேளாண் கணக்கெடுப்பு களப்பணியாளர்களுக்கு பயிற்சி

மதுரை, : வேளாண்மை வளர்ச்சித்திட்டங்களை மேம்படுத்த 11வது வேளாண்மை கணக்கெடுப்பு மதுரை மாவட்டத்தில் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. கணக்கெடுப்பில் வி.ஏ.ஓ.,க்கள், வருவாய் ஆய்வாளர்கள் ஈடுபட உள்ளனர்.

இவர்களுக்கு புள்ளி இயல் துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்ட பயிற்சியாக காரீப் மற்றும் ராபி பருவ பயிர்களின் நீர்ப்பாசனம், மானாவாரி மொத்த சாகுபடி பரப்பு, நிகர சாகுபடி பரப்பு, நீர்ப்பாசன வசதி பயன்பாடு, 9 வகை நில பாகுபாடு, சிறு, குறு, நடுத்தர, பெரிய விவசாயிகளின் நில வகை குறித்த கணக்கெடுப்பு பயிற்சி ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் நடந்தது.

மாவட்ட வருவாய் அலுவலர் வழிகாட்டுதலின்படி வி.ஏ.ஓ.,க்கள், வருவாய் ஆய்வாளர்களுக்கு புள்ளி இயல் துறை அலுவலர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட புள்ளி இயல் துணை இயக்குநர் துரை, கோட்ட புள்ளி இயல் உதவி இயக்குனர்கள் ரமேஸ்வரி, சுரேஷ், புள்ளி இயல் அலுவலர்கள், வட்டார புள்ளி இயல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement