வழி தவறி வந்த மிளாமான் மீட்பு

கடமலைக்குண்டு : மயிலாடும்பாறை அருகே சிறப்பாறை கிராமப் பகுதியில் மிளாமான்கள் அதிகம் உள்ளன.


நேற்று முன்தினம் மலைப்பகுதியில் இருந்து மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் மிளாமான் சிறப்பாறையில் விளைநிலத்தில் நுழைந்தது. அதனைத் தொடர்ந்து கிராமத்திற்குள் வந்த மானை தெரு நாய்கள் விரட்டியதால் அங்குமிங்கும் ஓடிச் சென்றது. தகவல் அறிந்த கண்டமனூர் வனத்துறையினர் சிறப்பாறை கிராமத்திற்கு சென்று மிளா மானை பாதுகாப்பான முறையில் மீண்டும் மலைப்பகுதிக்குள் விரட்டினர்.


மிளாமான் நுழைந்ததால் அருள்குமார் என்பவரின் தோட்டத்தில் காலிபிளவர் செடிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு வனத்துறையினர் நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement