முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

ஆர்.எஸ்.மங்கலம் : சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி நிலைக் குழு தலைவருமான தனசேகரன் தாயார் அயோத்தி அம்மாள் சொந்த ஊரான ஆர்.எஸ்.மங்கலம் அடுத்த சாத்தமங்கலம் கிராமத்தில் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன்.

தாயாரை இழந்து வாடும் தனசேகரனை தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தேன். தாயார் அயோத்தி அம்மாள் மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Advertisement