மகளிருக்கு முக்கியத்துவம் தரும் தி.மு.க., அரசு

அருப்புக்கோட்டை : மகளிர்களுக்கு திமுக அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது என அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.

அருப்புக்கோட்டை அருகே செட்டி குறிச்சியில் புதிய டிரான்ஸ்பார்மர் திறப்பு விழா, இராமநாயக்கன்பட்டியில் 2.50 செலவில் புது மயானத்தில் பிளாட்பார்ம் அமைக்கும் பணி, சுற்று வட்டார கிராமங்களில் பல்வேறு கட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது:

தி.மு.க., அரசு பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் கடன் பெற்று, சரியான முறையில் கட்டுபவர்கள் பெண்கள் தான். பெண்களுக்கான அரசாங்கம் இந்த தி.மு.க., அரசாங்கம் என, பேசினார்.

உடன் செட்டிகுறிச்சி ஊராட்சி தலைவர் பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

Advertisement