ஆர்ப்பாட்டம்
திருக்கோவிலுார் : மேமாளூர் கிராமத்தில் வீடுகளை இழந்த குடும்பத்திற்கு வீட்டுமனையுடன், வீடு கட்டி கொடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருக்கோவிலுார் அடுத்த மேமாலுார் கிராமத்தில், நீர்நிலை புறம்போக்கில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 144 வீடுகள் சமீபத்தில் இடித்து அகற்றப்பட்டது. இதனை கண்டித்து, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வீட்டுமனை, அரசு சார்பில், வீடு வழங்கிட வலியுறுத்தி இந்திய கம்யூ., சார்பில் மேமாளூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய துணைச் செயலாளர் அஞ்சாமணி தலைமை தாங்கினார்.
கிளைச் செயலாளர் முருகேசன், துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் முருகன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் ராமசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் சரவணன், ஒன்றிய செயலாளர் ரவி, முன்னாள் நகர செயலாளர் பஷீர் அகமது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement