தி.மு.க., ஆட்சியில் போலீஸ் துறைக்கு பல எஜமானர்கள்: அன்புமணி
சென்னை: '' தி.மு.க., ஆட்சியில் போலீஸ் துறைக்கு பல எஜமானர்கள் இருக்கிறார்கள். போலீஸ் துறையின் பின்னடைவுக்கும், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கும் இது தான் காரணம்,'' என பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ரமணியை மதன் என்பவர் வகுப்பறைக்குள் நுழைந்து சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதேபோல், ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில் கண்ணன் என்ற வழக்கறிஞர் கொடூரமான முறையில் வெட்டி சாய்க்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னை கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனைக்குள் ஒருவர் நுழைந்து டாக்டர் பாலாஜியை சரமாரியாக கத்தியால் குத்தியதால் ஏற்பட்ட அதிர்ச்சியும், பதற்றமும் விலகுவதற்கு முன்பாகவே தஞ்சாவூருக்கு அருகில் பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டிருப்பதையும், வழக்கறிஞர் கொடூரமான முறையில் வெட்டப்பட்டிருப்பதையும் பார்க்கும் போது நாம் எங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற அச்சம் தான் ஏற்படுகிறது.
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 6 ஆயிரம் படுகொலைகளும், 50 ஆயிரம் கொள்ளைகளும் நடந்திருக்கின்றன. ஆனால், போலீஸ் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வருக்கு இதைப்பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லை. மக்களுடன் கொஞ்சமும் ஒட்டாத வகையில், தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதையே திரும்பத் திரும்பக் கூறிவருகிறார். மக்களிடமிருந்தும், தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகளில் இருந்தும் முதல்வர் எவ்வளவு தூரம் விலகிச் சென்று கொண்டிருக்கிறார் என்பதற்கு இவை தான் சான்றுகள்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்குக் கூட முதல்வர் செல்லவில்லை. போலீசுக்கு தெரியாமல் கள்ளச்சாராயம் எவ்வாறு விற்க முடியும்? என்று ஐகோர்ட் இன்று வினா எழுப்பியுள்ளது. நீதித்துறை, மக்கள், அரசியல் கட்சிகள் என அனைத்துத் தரப்பினராலும் கடுமையாக விமர்சிக்கப்படும் அவல நிலைக்கு போலீஸ் துறை தள்ளப்பட்டுள்ளது.
போலீஸ் துறையை அதன் தலைமை இயக்குனர் தான் இயக்க வேண்டும்.
ஆனால், திமுக ஆட்சியில் போலீஸ் துறைக்கு பல எஜமானர்கள் இருக்கிறார்கள். போலீஸ் துறையின் பின்னடைவுக்கும், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கும் இது தான் காரணம். தமிழக முதல்வர் ஸ்டாலின் இனியாவது விழித்துக் கொண்டு தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அன்புமணி கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (4)
Barakat Ali - Medan,இந்தியா
20 நவ,2024 - 19:45 Report Abuse
இதே குற்றச்சாட்டு பலமுறை பலரால் சொல்லப்பட்டுள்ளது ....... மக்களையும் திருத்த முடியாது ....... ஆட்சியையும் திருத்த முடியாது ......
0
0
Reply
GMM - KA,இந்தியா
20 நவ,2024 - 17:48 Report Abuse
திராவிடம் போன்ற மாநில கட்சி ஆட்சியின் தவறை மறைக்க போலீஸ் துறை முக்கிய பங்கு இருக்கும் .? மத்திய காவலில் இருக்கும் ஒரே நீதிமன்றம் தமிழகத்தில் உள்ளது. குண்டு வெடிப்பு ,கொலை, தேச விரோத செயலை கட்டுப்படுத்த தென் மாநில அல்லது மத்திய கட்டுப்பாட்டில் போலீஸ் பிரிவு மிக அவசியம். போலீசுக்கு ஆளும் கட்சி தான் எஜமான். பல துறை தலைவர் கீழ் போலீஸ் பணியாற்றி, மாத சம்பளம் பெற வேண்டும். பல எஜமான் தேவை. தற்போது அறிவாலய நிழல் தான் எஜமான். சட்டம் ஒழுங்கு மேன்பட நீதிமன்றம், மத்திய அரசு தலையிட வேண்டும்.
0
0
Reply
raja - Cotonou,இந்தியா
20 நவ,2024 - 17:46 Report Abuse
விழித்து கொண்டு.. திராவிட கொள்ளை கூட்ட குடும்பத்தின் அடிமையாகி போணவனுவோ கிலிச்சானுவோ..
0
0
Reply
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
20 நவ,2024 - 17:36 Report Abuse
எங்கு சென்றாலும் மகிழ்ச்சியான முகங்களை பார்க்கிறேன். அடுத்து 200 இடம் நிச்சயம் என்று பெருமை பேசும் முதல்வருக்கு இதெல்லாம் தெரிய நியாயமில்லை
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement