திண்டுக்கல்லில் மாணவி உட்பட இருவருக்கு டெங்கு:வீடு,பள்ளியில் தடுப்பு நடவடிக்கை

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் நேற்று 13 வயது பள்ளி மாணவி உட்பட இருவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானதை தொடர்ந்து பொது
சுகாதாரத்துறை அதிகாரிகள் பள்ளி,வீடு உள்ளிட்ட பகுதியில் கொசு மருந்து அடித்து டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கி அடிக்கடி கனமழை பெய்து வருகிறது. இதனால் வீடுகளில்
சிமென்ட் சிலாப்புகள்,ரோட்டோரங்கள்,தேவையில்லாத பொருட்கள்,உபயோகமில்லாத வாகன டயர்களில் தண்ணீர் தேங்கி டெங்கு கொசுக்களை பரப்பும் 'ஏடிஸ்'கொசுக்களின் உற்பத்தி அதிகரித்தது. இதைத்தடுக்கும் கொசு ஒழிப்பு பணியாளர்களை கண்ணில் பார்க்க

முடியாத அளவிற்கு மாயமாகினர். கொசு மருந்து அடிப்பவர்களும் தங்கள் பணியில் சுணக்கம் காட்ட டெங்கு காய்ச்சலின் ஆதிக்கம் திண்டுக்கல் மாவட்டத்தில் தொடங்கியது.

அக்டோபரிலிருந்து ஒருசிலர் டெங்குவால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதியாகினர். அவர்களுக்கென தனி வார்டுகள் அமைக்கப்பட்டது. சிகிச்சை பெறும் நோயாளிகள் குணமடைந்துவீட்டிற்கு செல்வதும் ஒருசிலர் அனுமதியாகும் நிலை இருந்தது. நேற்றும் ஏராளமானோர் உடல்நலம் சரியில்லாமல் திண்டுக்கல் அரசு

மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தனர்.

அதில் ஆத்துார் பெரும்பாறை பகுதியை சேர்ந்த 13 வயது மாணவி உட்பட இருவருக்குடெங்கு காய்ச்சல் இருப்பதை டாக்டர்கள் உறுதி செய்ததை தொடர்ந்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்தபொது சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பந்தபட்ட மாணவியின் இருப்பிடத்தை கண்டறிந்து அப்பகுதி முழுவதும் கொசு மருந்து

அடிப்பது,நிலவேம்பு கசாயம் வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.

மாணவியின் பள்ளிக்கும் சென்று கொசு மருந்து அடித்து அவரது வகுப்புமாணவர்களையும் பரிசோதனை செய்து டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தற்போது திண்டுக்கல் அரசு மருத்துவமனையில்டெங்குவால் பாதிக்கப்பட்டு 3 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement