ஆவணங்களின்றி மாணவர்களை ஏற்றிவந்த 3 தனியார் பள்ளி பஸ்கள் பறிமுதல்

திண்டுக்கல்;திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில் ரோடுவரி,காப்பு சான்றி,அனுமதி உரிமம் உள்ளிட்ட எந்த முறையான ஆவணங்களும்
இல்லாமல் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த 3 தனியார் பள்ளி பஸ்களை போக்குவரத்து பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து ரூ.3 அரை லட்சம் அபராதம் விதித்தனர்.

திண்டுக்கல் சுற்றவட்டார பகுதிகளான ஆத்துார்,கன்னிவாடி,வத்தலக்குண்டு,பழநி,கொடைக்கானல் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முறையாக எந்த ஆவணங்களும் இல்லாமல் அதிக வாகனங்கள் சுற்றித்திரிவதாக திண்டுக்கல் வட்டார போக்குவரத்துஅதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. நேற்று திண்டுக்கல் பறக்கும் படை மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் கொடைக்கானல் டூ வத்தலக்குண்டு ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வத்தலக்குண்டு பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியின் 3 பஸ்கள் பள்ளி மாணவர்களுடன் வந்தது. அதிகாரிகள் அந்த பஸ்சை மடக்கி சோதனையிட்டனர்.


அதில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ரோடு வரி,அனுமதி உரிமம்,காப்பு சான்றிதழ்,அரசுக்கு செலுத்த வேண்டிய வரி உள்ளிட்ட எந்த முறையான ஆவணங்களும் செலுத்தாமல் இருந்தது தெரிந்தது. அதிகாரிகள் உடனே பஸ்களில் இருந்த மாணவர்களை வேறுவாகனங்களில் ஏற்றி அவரவர் வீடுகளுக்கு அனுப்பிவிட்டு ரூ.3 அரை லட்சம் அபராதம் விதித்து 3 பஸ்களையும் பறிமுதல் செய்து
வத்தலக்குண்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Advertisement