பீமன் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்தவர் பலி

போளூர்:திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கொசப்பாளையத்தை சேர்ந்தவர் தாமோதரன், 25. அதே பகுதியை சேர்ந்தவர் ஹரிநாத், 25. இருவரும் நேற்று, பைக்கில் ஜமுனாமரத்துார் அருகே உள்ள பீமன் நீர்வீழ்ச்சிக்கு சென்று குளித்தனர்.

அப்போது, தாமோதரன் கால் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி பலியானார். ஜமுனாமரத்துார் தீயணைப்பு துறையினர் சடலத்தை மீட்டனர். ஜமுனாமரத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement