முதியோர் நாடாக மாறுகிறது தென்கொரியா; மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் 65 வயதை கடந்தவர்கள்!

4


சியோல்: 'தென்கொரியா முதியோர் நாடாக மாறுகிறது மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் 65 வயதை கடந்தவர்கள்' என தரவுகள் தகவல் தெரிவிக்கின்றன.



தென் கொரியா கிழக்கு ஆசியாவிலுள்ள ஒரு நாடாகும். இங்கு பவுத்த, கிறித்தவ மக்கள் வசிக்கின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் தொகை 5.17 கோடி. தற்போது தென் கொரியா முதியோர் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் நாடாக மாறி வருகிறது. 20 சதவீதம் பேர் 65 வயதை கடந்தவர்கள்' என தரவுகள் தகவல் தெரிவிக்கின்றன.



இது குறித்து உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய தரவுகள் விவரம் வருமாறு: தென் கொரியாவில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கை 1.024 கோடியாக உள்ளது. இது மக்கள் தொகையில் 20 சதவீதம் ஆகும். அதேபோல், பிறப்பு விகிதங்கள் குறைந்து வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு 0.72 சதவீதமாக பிறப்பு விகிதம் சரிந்துள்ளது.


தற்போது நிலவரப்படி, 65 வயது மேற்பட்ட பெண்கள் 22 சதவீதம். அதேநேரத்தில் 18 சதவீதம் பேர் ஆண்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையானது 65 அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள்தொகையில் 7% க்கும் அதிகமானவர் இருக்கும் நாடுகளை வயது முதிரும் சமூகம் Aging society என்றும், 14% க்கு மேல் உள்ளவர்களை வயதான சமூகம் Aged society என்றும், 20% க்கு மேல் உள்ளவர்களை அதிக வயதானவர் சமூகம் super aged society என்றும் அழைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement