அமைதி, செழிப்புக்கான பாதை உண்டாகட்டும்; பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் வாழ்த்து

14


புதுடில்லி: 'இயேசு கிறிஸ்துவின் போதனைகள் அனைவருக்கும் அமைதி மற்றும் செழிப்புக்கான பாதையை உண்டாக்கட்டும்' என பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள். இயேசு கிறிஸ்துவின் போதனைகள் அனைவருக்கும் அமைதி மற்றும் செழிப்புக்கான பாதையை உண்டாக்கட்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பா.ஜ., தலைவர், அண்ணாமலை




கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும், பா.ஜ., சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரின் வாழ்வும் மகிழ்ச்சியான தருணங்களால் நிரம்பியிருக்கட்டும். சமூகத்தில், அமைதியும், அன்பும் நிரம்பியிருக்கட்டும். அனைவருக்கும், இயேசு பெருமான் தமது ஆசீர்வாதங்களை தொடர்ந்து அருளட்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி,.எஸ்.,



அன்பு கிறிஸ்தவ சகோதரர்கள், சகோதரிகள் அனைவருக்கும், கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். நாம் மற்றவர்களிடம் எதை எதிர்பார்க்கிறோமோ, அதையே மற்றவர்களுக்கும் நாம் செய்ய வேண்டும்” என்ற இயேசுபிரானின் போதனையை மனதில்கொண்டு அனைவரையும் சமமாக பாவித்து அன்பு செலுத்திட வேண்டும்.

த.வெ.க., தலைவர் விஜய்



அனைவருக்கும் என் அன்பான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்; அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம் ஆகியவை நிலைத்து நீடித்திருக்கட்டும்.

Advertisement