சன்னிதானத்தில் 7 லட்சம் பேருக்கு அன்னதானம்

சபரிமலை:சபரிமலை மாளிகைப்புறம் கோவிலின் பின்புறம் உள்ள அன்னதான மண்டபத்தில் நேற்று வரை, 7 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு கூறியுள்ளது. அன்னதான நன்கொடையாக மட்டும், 2.18 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

பந்தளம், எருமேலி, நிலக்கல் கோவில்களில் இந்த ஆண்டு முதல் திருவிதாங்கூர் தேவசம்போர்டு நேரடியாக அரவணை அப்பம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த வகையில் மட்டும் தேவசம்போர்டுக்கு, 2.32 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.

Advertisement