மதச்சார்பின்மையை பேணிக்காத்தவர் வாஜ்பாய்; முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

4

சென்னை: மதச்சார்பின்மையை பேணிக்காத்தவர் வாஜ்பாய் என முதல்வர் ஸ்டாலின் பாராட்டி உள்ளார்.


முன்னாள் பிரதமரும், பா.ஜ.,வின் அடையாளமாக இருந்தவருமான வாஜ்பாய், 1924 டிச., 25ல் பிறந்தார்; 2018 ஆக., 16ம் தேதி, தன் 93வது வயதில் காலமானார். இன்று, அவரது 101வது பிறந்த நாள். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்தநாளில் தமிழகத்தின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பினையும், கருணாநிதியுடன் அவர் கொண்டிருந்த நட்புறவினையும் நினைவு கூர்கிறோம்.

வலதுசாரிக் கருத்தியல் கொண்டவராக இருந்தாலும், பிரதமர் பொறுப்பில் இருந்த போது நாட்டின் மதச்சார்பின்மைப் பண்பை அவர் பேணிக்காத்தார். அவரது வாழ்வும் பணியும் நிலைத்து நிற்கும்! இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement