கார் மீது லாரி மோதிய விபத்து; திருப்பூர் பக்தர்கள் மூவர் பலி!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மேல கரந்தையில் ரோட்டோரமாக நின்ற கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டதில், பக்தர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மேல கரந்தையில் ரோட்டோரமாக நின்ற கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், காரில் வந்த திருப்பூர் மாவட்டம் அலங்கியத்தை சேர்ந்த பக்தர்கள் விக்னேஷ், விஜயகுமார், செல்வராஜ் ஆகியோர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இருவர் காயம் அடைந்து உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் திருச்செந்தூர் கோவிலுக்கு மாலை அணிந்து சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்தது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


நிவாரணம்



'விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்த ராஜ்குமார், மகேஷ் குமாருக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும்' என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Advertisement