கோவாவில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து ஒருவர் பலி: 20 பேர் மீட்பு

பனாஜி: கோவா அருகே அரபிக்கடலில் சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 20 பேர் மீட்கப்பட்டனர்.


கோவா ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும். இங்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது, ​​இன்று அரபிக் கடலில் சுற்றுலாப் பயணிகள் படகு விபத்தில் சிக்கி உள்ளது.

படகு விபத்து குறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில்,

வடக்கு கோவாவில் உள்ள கலங்குட் கடற்கரையில் அரபிக்கடலில் இன்று சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 54 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார். சுமார் 20 பேர் மீட்கப்பட்டனர்.இச்சம்பவம் பிற்பகல் நடந்தது.

மீட்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.மேலும், இருவரைத் தவிர, ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட அனைத்து பயணிகளும் லைப் ஜாக்கெட் அணிந்திருந்தனர்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

அரசால் நியமிக்கப்பட்ட உயிர்காக்கும் நிறுவனமான த்ரிஷ்டி மரைனின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கடலோரப் பகுதியில் இருந்து சுமார் 60 மீட்டர் தொலைவில் படகு கவிழ்ந்தது, இதனால் பயணிகள் அனைவரும் கடலில் விழுந்தனர்.

மஹாராஷ்டிராவில் உள்ள கெட் பகுதியைச் சேர்ந்த 13 பேர் கொண்ட ஒரு குடும்பம் இதில் பயணித்துள்ளனர்.ஒட்டுமொத்தமாக, பணியில் இருந்த 18 உயிர்காக்கும் வீரர்கள் போராடி, பயணிகளுக்கு விரைந்து வந்து உதவி, அவர்களை பத்திரமாக கரைக்கு கொண்டு வந்தனர்.காயமடைந்த பயணிகளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது, மேலும் ஆபத்தான நிலையில் காணப்பட்டவர்கள் ஆம்புலன்சில் மருத்துவ வசதிக்கு அழைத்து செல்லப்பட்டனர் என்றார்.

Advertisement