ரூ.3 கோடியில் எரிவாயு தகனமேடை

பல்லாவரம், டிச. 26-

தாம்பரம் மாநகராட்சியில், பல்லா வரம், அனகாபுத்துாரில், 3 கோடி ரூபாய் செலவில், எரிவாயு தகன மேடை கட்டும் பணி நடந்து வருகிறது.

தாம்பரம்மாநகராட்சியில், குரோம்பேட்டை, கீழ்க்கட்டளை,சிட்லப்பாக்கம், அஸ்தினாபுரம், மேற்கு தாம்பரம் என, ஏழு இடங்களில் எரிவாயு தகன மேடைகள் உள்ளன.

இந்நிலையில், பல்லாவரம் மற்றும் அனகாபுத்துார்பகுதிகளில் இறப்பு ஏற்பட்டால், உடலை தகனம் செய்ய, நீண்ட துாரத்தில் உள்ள குரோம்பேட்டைக்கு தான் வரவேண்டியுள்ளது.

அதுபோன்ற நேரத்தில், போக்குவரத்து நெரிசலில் சிக்கி, வர சிரமமாக உள்ளது. அதனால், அனகாபுத்துார், பல்லாவரம் மளங்கானந்தபுரம் ஆகிய இடங்களில், தலா, 1.50 லட்சம் ரூபாய் செலவில், நவீன எரிவாயு தகன மேடை கட்டும் பணி நடந்து வருகிறது.

ஜனவரி முதல், இந்த இரண்டு தகன மேடைகளும் பயன்பாட்டிற்கு வரும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement