தொடர் திருட்டில் மங்கி குல்லா கொள்ளையர்கள்: ஓசூர் பகுதி குடியிருப்புவாசிகள் அச்சம்



ஓசூர், டிச. 26-
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே குருபட்டி, அச்செட்டிப்பள்ளி, ஜொனபெண்டா பகுதியில் உள்ள தனியார் லே அவுட் குடியிருப்புகளை குறி வைத்து, மங்கி குல்லா கொள்ளையர்கள், வீட்டின் பூட்டை உடைத்து திருடி வருகின்றனர்.
ஓசூர் அருகே குளோபல் சிட்டி லே அவுட்டில் கடந்த, 8ல், ஒரு வீட்டிற்குள் புகுந்து, 4 பேர் கொண்ட மங்கி குல்லா கொள்ளையர்கள் திருடி விட்டு தப்பி செல்லும் சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதேபோல், குருபட்டி, அச்செட்டிப்பள்ளி, ஜொனபெட்டா பகுதியில் உள்ள தனியார் லே அவுட் குடியிருப்புகளில் கடந்த, 3 மற்றும் 23 ல், திருடி சென்றுள்ளனர்.
போலீசார் ரோந்து செல்லாத லே அவுட்டுகளில் தொடர் திருட்டு சம்பவம் அரங்கேறி வருகிறது. இதனால், குடியிருப்புவாசிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். சிகப்பு கலர் சான்ட்ரோ மற்றும் ரெனால்ட் டஸ்டர் கார்களில், 4 பேர் கொள்ளை கும்பல் வந்து செல்வதாக கூறும் மக்கள், பூட்டியிருக்கும் வீடுகளை குறி வைத்து மங்கி குல்லா கொள்ளையர்கள் திருடுவதாக தெரிவித்துள்ளனர். ஓசூர் ஏ.எஸ்.பி., அக்சய் அணில் வாகரே, சிறப்பு தனிப்படையை அமைத்து, மங்கி குல்லா கொள்ளையர்களை பிடிப்பதுடன், இரவு ரோந்து பணி போலீசார் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

Advertisement