இளம் பெண் மாயம்


இளம் பெண் மாயம்
ஓசூர், டிச. 26-
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே முத்தாலியை சேர்ந்தவர் நாகப்பா மகள் பல்லவி, 19. நேற்று முன்தினம் மதியம், 3:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது தந்தை நல்லுார் போலீசில் கொடுத்த புகாரில், கெலமங்கலம் அருகே தம்மநாயக்கனப்பள்ளியை சேர்ந்த தனியார் கார்மென்ட்ஸ் ஊழியர் சூரி, 21, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் மாயமான பல்லவியை தேடி வருகின்றனர்.

Advertisement