வெவ்வேறு சம்பவங்களில் நீரில் மூழ்கி இருவர் பலி

பாப்பிரெட்டிப்பட்டி, டிச. 26---
கடத்தூர் அடுத்த மயிலாப்பூரை சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு, மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில், மூன்றாவது மகள் காவியா,13. புதுரெட்டியூர் அரசு பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன் தினம் தோழிகளுடன் அப்பகுதியில் உள்ள ஆலமரத்து ஏரியில் குளிக்க சென்றார். அனைவரும் குளித்து கொண்டிருந்தனர். அப்போது காவியா திடீரென்று நீரில் மூழ்கினார். தோழிகள் கூச்சலிடவே அங்கிருந்தவர்கள் ஏரியில் குதித்து காப்பாற்ற முயற்சி செய்தனர். இருப்பினும் காவியா உயிரிழந்தார்.
இதேபோன்று கடத்தூர் அடுத்த லிங்கநாய்க்கனஹள்ளியை சேர்ந்தவர் தங்கவேல், 58; கூலி தொழிலாளி. இவருக்கு ஆஸ்துமா நோய் இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் அப்பகுதியில் உள்ள கமலேசனின் விவசாய கிணற்றில் குளிக்க சென்றர். குளிக்கும்
பொழுது நீச்சல் அடிக்க முடியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தார். தபாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினர் உடலை மீட்டனர். கடத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement