மளிகை கடையில் பட்டாசு விற்பனை செய்தவர் கைது
மளிகை கடையில் பட்டாசு விற்பனை செய்தவர் கைது
மகேந்திரமங்கலம், டிச. 26-
தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அடுத்த கிட்டம்பட்டியில் உள்ள மளிகைக்கடை ஒன்றில், அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்வதாக, மகேந்திரமங்கலம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் கிட்டம்பட்டி பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, உதயகுமார், 29, என்பவரின் மளிகை கடையில் உரிய அனுமதியின்றி, எளிதில் தீப்பிடிக்க கூடிய பட்டாசு மற்றும் சரவெடிகள் விற்பனைக்காக வைக்கபட்டிருந்தது தெரியவந்ததை அடுத்து, பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். உதயகுமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement