புகையிலை பொருட்கள் லாட்டரி விற்ற 16 பேர் கைது



புகையிலை பொருட்கள் லாட்டரி விற்ற 16 பேர் கைது


கிருஷ்ணகிரி, டிச. 26-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், லாட்டரி சீட்டுகள் விற்கப்படுகிறதா என அந்தந்த பகுதி போலீசார் சோதனை நடத்தினர். அதன்படி பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற ஓசூர் சிப்காட் ஆசிக் உதின்,24; பாகலுார் சந்திரசேகர்,42, வேரிகை மஞ்சுநாத்,38, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அதேபோல பர்கூர், கிருஷ்ணகிரி, பேரிகை, சூளகிரி, ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, தேன்கனிக்கோட்டை பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்ற, 13 பேரை போலீசார் கைது
செய்தனர்.

Advertisement