பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ேதன்கனிக்கோட்டை, டிச. 26-
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே என்.கொத்துார் கிராமத்தில், பால் கொள்முதல் நிலையம் முன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், விவசாயிகள் நேற்று கால்நடைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தளி ஒன்றிய குழு உறுப்பினர் கணேஷ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராமசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினர்கள் அனுமப்பா, நடராஜ் ஆகியோர், கோரிக்கை குறித்து விளக்கி பேசினர். பசும் பால் விலையை லிட்டருக்கு, 45 ரூபாயாகவும், எருமைப்பால் லிட்டர், 54 ரூபாயாகவும் அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்.
கால்நடைகளுக்கு ஆண்டுதோறும் பிப்., மற்றும் ஆக., மாதங்களில் இலவச தடுப்பூசி போட வேண்டும். ஆண்டுதோறும் பாலுக்கு விலை அறிவிக்க வேண்டும். ஆவினில் தினசரி பால் கொள்முதலை, ஒரு கோடி லிட்டராக உயர்த்த வேண்டும். அதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.