எல்.இ.டி., பல்புகளால் 90 சதவீதம் மின் சிக்கனம்


ராசிபுரம், டிச. 26-
ராசிபுரத்தில் மின்வாரிய ஊழியர்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை எம்.பி., ராஜேஸ்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அமைச்சர் மதிவேந்தன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொதுமக்களிடையே துண்டு
பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பேரணியில், நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின்சாரம் எவ்வளவு அவசியமானது; மின்சாரத்தை தேவையில்லாமல் விரயமாக்குவதை தவிர்க்க வேண்டும்; பொதுமக்கள் மின் விரயம் ஆவதை தவிர்க்க குமிழ் பல்புகளை மாற்றி எல்.இ.டி., பல்புகளை பயன்படுத்த வேண்டும். குமிழ் விளக்கை பயன்படுத்துவதால், 90 விழுக்காடு மின்சாரம்
வீணாகிறது.
தேவையில்லாதபோது விளக்கு, மின்விசிறி, மின் சாதனங்களை நிறுத்திவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை பொதுமக்களிடையே பேரணியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பழைய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி கடைவீதி, நாமக்கல் சாலை, சேலம் சாலை ஒரு கிலோ மீட்டர் சென்றது. பேரணியில் தனியார் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement