வாஜ்பாய் பிறந்தநாள் விழா
குமாரபாளையம், டிச. 26-
குமாரபாளையம் பா.ஜ., சார்பில், வாஜ்பாய் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நகர தலைவர் வாணி பிரபு தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், வாஜ்பாய் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பள்ளி மாணவ, மாணவியருக்கு நோட்டுகள் மற்றும் கல்வி உபகரணங்களை ராஜேஷ்குமார் வழங்கினார். மாவட்ட பொதுச்செயலர் சரவணராஜன், மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் தங்கவேல், மாவட்ட செயலர் சவுமியா, தொகுதி அமைப்பாளர் நாகராஜ், முன்னாள் நகர தலைவர் சேகர், உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement