ஆடிட்டர் மாயம் போலீசார் வழக்கு


ஆடிட்டர் மாயம் போலீசார் வழக்கு


ஈரோடு, டிச. 26-
ஈரோடு, முனிசிபல் காலனி ஜான்சி நகர் 2வது வீதியை சேர்ந்தவர் பிரான்சிஸ், 44, ஆடிட்டர். இவருக்கு திருமணமாகி, கருத்து வேறுபாட்டால் மனைவியை பிரிந்து சில ஆண்டுகளாக வசித்து வருகிறார். வேலை பளு அதிகம் இருப்பதாக, தன் சகோதரி உஷாவிடம் கூறி வந்துள்ளார். இதனால் கடந்த, 22ல் பெங்களூருவில் இருந்து ஈரோட்டில் உள்ள வீட்டுக்கு உஷா வந்துள்ளார். இதையடுத்த, வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற பிரான்சிஸ், உஷாவின் மொபைல் போனுக்கு அம்மாவை பார்த்து கொள் என, எஸ்.எம்.எஸ். அனுப்பி விட்டு, மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார்.உஷா அளித்த புகார்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement