காசநோய் இல்லாத ஈரோடு விழிப்புணர்வு முகாம்

காசநோய் இல்லாத ஈரோடுவிழிப்புணர்வு முகாம்

ஈரோடு, டிச. 26--
சிவகிரி அருகே கொளத்துப்பாளையம் புதுார் மற்றும் வருந்தியாபாளையத்தில், சென்னசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், 'காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம்' நடந்தது. காசநோய் பரவும் விதம், நுரையீரல் காசநோய் அறிகுறி, நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன், பரிசோதனை குறித்து விளக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பாலகுமார் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்பகுதியை சேர்ந்த, 110 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு மார்பக ஊடுகதிர் பரிசோதனை, சளி பரிசோதனை செய்யப்பட்டது. சுகாதாரத்துறை மூலமாக, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.

Advertisement