'புதுமைப்பெண், தமிழ் புதல்வனில் பயன்பெறும் 35,959 மாணவர்கள்'


சேலம், டிச. 26-
சமூக நலன், மகளிர் உரிமைத்துறை சார்பில், புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டம் குறித்த, கண்காணிப்பு குழு கூட்டம், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. அதில் கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது:
அரசு பள்ளி, அதன் உதவி பெறும் பள்ளி, கட்டாய கல்வி உரிமை சட்டம் மூலம் தனியார் பள்ளிகளில், 6 முதல், பிளஸ் 2 வரை படித்த மாணவர்களுக்கு, புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டத்தில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டம் மூலம், 21,151 மாணவியர், தமிழ் புதல்வன் திட்டத்தில், 14,808 மாணவர்கள் என, 35,959 மாணவ, மாணவியர் பயன்பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
சமூக நல அலுவலர் கார்த்திகா, முதன்மை கல்வி அலுவலர் கபீர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement