கபடி: அரையிறுதியில் உ.பி.,

புனே: புரோ கபடி தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியது உ.பி., அணி.
இந்தியாவில், புரோ கபடி லீக் 11வது சீசன் நடக்கிறது. லீக் சுற்று போட்டிகள் முடிந்த நிலையில், ஹரியானா (84 புள்ளி), டில்லி (81) அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறின. 3 முதல் 6 வரையிலான இடம் பிடித்த உ.பி., (79), பாட்னா (77), மும்பை (71), ஜெய்ப்பூர் (70) அணிகள் 'எலிமினேட்டர்' போட்டியில் மோதின. நேற்று நடந்த முதல் போட்டியில் உ.பி., அணி, ஜெய்ப்பூரை சந்தித்தது.
இதில் 46-18 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்ற, அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் இன்று ஹரியானாவை சந்திக்க உள்ளது. நேற்று நடந்த மற்றொரு போட்டியில் பாட்னா அணி, 31-23 என மும்பையை வீழ்த்தியது. அரையிறுதியில் டில்லியை சந்திக்கிறது.

Advertisement